ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஆக். மாதத்திற்கான விருது பட்டியலில் சான்ட்னர், நோவ்மன், ரபாடா பெயர் பரிந்துரை!

Updated: Tue, Nov 05 2024 21:05 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் அந்த அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதேசமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியாது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் காகிசோ ரபாடா, மிட்செல் சாண்ட்னர் மற்றும் நோவ்மன் அலி ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

இதில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதை வென்றதன் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். 

இதுதவிர்த்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோவ்மன் அலி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதன் மூலம் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுகான பரிந்துரை பட்டியலில் இணைந்துள்ளார். இதில் வாக்குகளின் அடிப்படையில் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களுக்கு இந்த விருதை ஐசிசி வழங்கி கவுரவிக்கும். 

Also Read: Funding To Save Test Cricket

அதேபோல் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் நியூசிலாந்தின் அமெலியா கெர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டியாண்டிரா டோட்டின் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வோல்வார்ட் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று வீராங்கனைகளும் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை