MI New York vs San Francisco Unicorns Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது  டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் எம்ஐ நியூயார்க் அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்று தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

NY vs SF Match Details

  • மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் vs சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 23, அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Grand Prairie Stadium, Dallas  Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

NY vs SF: Where to Watch?

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

NY vs SF Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஃபின் ஆலன்
  • பேட்ஸ்மேன்கள் - மோனாங்க் படேல்
  • ஆல்-ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), மேத்யூ ஷார்ட் (துணை கேப்டன்), ஹசன் கான்
  • பந்துவீச்சாளர்கள்-  டிரென்ட் பவுல்ட், சேவியர் பார்ட்லெட், நவீன் உல் ஹக், ஹாரிஸ் ரவுஃப்.

NY vs SF Predicted Playing 11

Advertisement

MI New York Probable XI : மோனாங்க் படேல், குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), கீரோன் பொல்லார்ட், மைக்கேல் பிரேஸ்வெல், ஹீத் ரிச்சர்ட்ஸ், தாஜிந்தர் தில்லான், சன்னி படேல், டிரென்ட் போல்ட், நவீன்-உல்-ஹக், ருஷில் உகர்கர்.

San Francisco Unicorns Probable XI :மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ஃபின் ஆலன், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், டிம் சீஃபர்ட், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹசன் கான், கரிமா கோர், சேவியர் பார்ட்லெட், ஹாரிஸ் ரவுஃப், கார்மி லு ரூக்ஸ், பிராடி கோச்.

NY vs SF Dream11 Prediction, NY vs SF Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, NY vs SF Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, MI New York vs San Francisco Unicorns

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News