MI New York vs Washington Freedom Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி, ஒரு சிக்ஸர் என 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் எம்ஐ நியூயார்க் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. இரு வலிமையான அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

NY vs WAS Match Details

  • மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் vs வாஷிங்டன் ஃப்ரீடம்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 21, காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Grand Prairie Stadium, Dallas Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

NY vs WAS: Where to Watch?

Advertisement

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

NY vs WAS Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்கள் - கீரோன் பொல்லார்ட், கிளென் மேக்ஸ்வெல், மோனாங்க் படேல்
  • ஆல்-ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஜாக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஓவன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- டிரென்ட் பவுல்ட், சவுரப் நேத்ராவல்கர்.

NY vs WAS Predicted Playing 11

Advertisement

MI New York XI : குயின்டன் டி காக், ஹீத் ரிச்சர்ட்ஸ், மோனாங்க் படேல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், கீரோன் பொல்லார்ட், தாஜிந்தர் தில்லான், சன்னி படேல், டிரென்ட் போல்ட், நவீன்-உல்-ஹக், எஹ்சான் அடில்.

Washington Freedom XI : மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திர, ஆண்ட்ரீஸ் கஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), மார்க் சாப்மேன், ஜாக் எட்வர்ட்ஸ், ஒபாஸ் பியினார், இயன் ஹாலண்ட், மார்க் அதிர், யாசிர் முகமது, சவுரப் நேத்ராவல்கர்.

NY vs WAS Dream11 Prediction, NY vs WAS Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, NY vs WAS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, MI New York vs Washington Freedom

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News