நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மார்க் சாப்மேன் காயத்தை சந்தித்தார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவருக்கு முதல் தர காயம்  இருப்பதுஉறுதியானது. இதனால் அவர் இரண்டாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அவருக்கு பதில் நியூசிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கபட்ட டிம் செய்ஃபெர்ட் அணியில் தொடர்வார் என்றும் ஆறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் டி20 தொடரில் டிம் செஃபெர்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இருப்பினும் மார்க் சாப்மேன் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நியூசிலாந்து ஒருநாள் அணி: டாம் லாதம் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட், நாதன் ஸ்மித், வில் யங்

Advertisement

பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News