ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டில் வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இருப்பினும் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் சதமடித்து அசத்தினார். இதன்மூலம்  முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேமரூன் க்ரீன் 103 ரன்களுடனும், ஜோஷ் ஹசில்வுட் இணை தொடர்ந்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் மளமளவென ஸ்கோரை உயர்த்தி அசத்தினார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் 22 ரன்கள் எடுத்திருந்த ஜோஷ் ஹசில்வுட் விக்கெட்டை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆனாலும் ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் லேதம் 5, வில் யங் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து டேரில் மிட்செல்லும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளண்டல் - கிளென் பிலீப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் கிளென் பிலீப்ஸ் அரைசதம் கடந்தார். அதன்பின் டாம் பிளெண்டல் 33 ரன்களிலும், கிளென் பிலீப்ஸ் 71 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய மேட் ஹென்றி 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், மார்னஸ் லபுஷாக்னே 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், நாதன் லையன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 217 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News