வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக டிம் செய்ஃபெட் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை வீசிய ஷொரிஃபுல் இஸ்லாம், நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதனால் நியூசிலாந்து அணி ஒரு ரன்னிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டெரில் மிட்செல் - மார்க் சாப்மேன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் மிட்செல் 14 ரன்களிலும், மார்க் சாப்மேன் 19 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த ஜிம்மி நீஷம் - மிட்செல் சான்ட்னர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 23 ரன்களில் மிட்செல் சான்ட்னர் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜிம்மி நீஷம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 29 பந்துகளில் 48 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆடம் மில்னே, டிம் சௌதீ, இஷ் சோதி ஆகியோர் தங்களால் முடிந்த ரன்களைச் சேர்த்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்து. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 2 சிக்சர்களை விளாசி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News