இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது. 

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் சதமடித்து அசத்தியதுடன் 171 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களையும், ஒல்லி போப் 77 ரன்களையும் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 499 ரன்களைச் சேர்த்த கையோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய் நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் ஒரு ரன்னிலும், டெவான் கான்வே 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் ஒருபக்கம் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த கையோடு 61 ரன்னிலும், க்க, மறுமுனையில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 24 ரன்னில் அட்டமிழந்தர். பின்னர் களமிறங்கிய் டம் பிளெண்ட்ல், கிளென் பிலீப்ஸ் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் நடையை கட்ட, நியூசிலாந்து அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டும் சேர்த்தது.

இதனையடுத்து இன்று தொடங்கிய 4ஆம் நாள் ஆட்டத்தை டேரில் மிட்செல் 31 ரன்களுடனும், நாதன் ஸ்மித் ஒரு ரன்னுடன் தொடர்ந்தனர். இதில் நாதன் ஸ்மித் 21 ரன்னிலும், மேட் ஹென்றி ஒரு ரன்னிலும், டிம் சௌதீ 12 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த டேரில் மிட்செல் அரைசதம் கடந்ததுடன் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 84 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி இரண்டவது இன்னிங்ஸில் 254 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், பென் டக்கெட் 27  ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஜேக்கப் பெத்தேல் - ஜோ ரூட் இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதில் ஜேக்கப் பெத்தெல் 50 ரன்களையும், ஜோ ரூட் 23 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 12.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News