இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - கேப்டன் டாம் லேதம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் லேதமுடன் இணைந்த வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தும் அசத்தினர். பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்காப்பட்ட டாம் லேதம் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இதனையடுத்து கேன் வில்லியம்சனுடன் இணைந்த ரச்சின் ரவீந்திராவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். இதில் கேன் வில்லியம்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்க, ஆடுத்து களமிறங்கியா டேரில் மிட்செல் 19 ரன்களில் நடையைக் கட்டினார். இதற்கு மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் சதம்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளெண்டர் - கிளென் பிலீப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கிளென் பிலீப்ஸ் அதிரடியாக விளையாட, மறுபக்கம் டாம் பிளெண்டல் 17 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் நாதன் ஸ்மித் 3 ரன்களிலும், மேட் ஹென்றி 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் கிளென் பிலீப்ஸுடன் இணைந்த டிம் சௌதியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்துள்ளது.

இதில் கிளென் பிலீப்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களையும், டிம் சௌதீ 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷொயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இதனையடுத்து கைவசம் 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News