நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்கள் எடுத்த நிலையில் ஃபின் ஆலன் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டெரில் மிட்செல் 17, கிளென் பிலீப்ஸ் 13, மார்க் சாப்மேன் 3, மிட்செல் சாண்ட்னர் 25 ரன்கள் என ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் சைம் அயூப் ஒரு ரன்னிலும், முகமது ரிஸ்வான் 7 ரன்களிலும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - ஃபகர் ஸமான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தது அசத்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இஃப்திகார் அஹ்மத் 4 ரன்களுக்கும், அசாம் கான் 2 ரன்களுக்கும், அமர் ஜமால் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 7 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 66 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணியின் தோல்வியும் உறுதியானது. இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News