நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. 

Advertisement

இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டியானது வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெர்றது. இப்போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் பெத் மூனி 21 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ்ஜியா வோல் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 26 ரன்களிலும், ஜார்ஜியா வோல் 75 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் எல்லி பெர்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ரோஸ்மெரி மைர், சோஃபி டிவைன், அமெலியா கெர், சூஸி பேட்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் கேப்டன் சூஸி பேட்ஸ் 7 ரன்னிலும், ஜார்ஜியா பிலிம்மர் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பெல்லா ஜேம்ஸ் 14 ரன்களுக்கும், சோஃபி டிவைன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 54 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த அமெலியா கெர் மற்றும் மேடி க்ரீன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு பக்கமாக பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் மேடி கிரீன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 66 ரன்களை சேர்த்த நிலையில் அமெலியா கெரும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜெஸ் கெர், பொலி இங்கில்ஸ் உள்ளிட்ட வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜார்ஜியா வோல் ஆட்டநாயகி விருதையும், பெத் மூனி தொடர்நாய்கி விருதையும் கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News