இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. 

Advertisement

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஓருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - பெர்னண்டைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

இதில் பெர்னண்டைன் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான சூஸி பேட்ஸ் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் அமெலியா கெர், பிலிம்மெர், மேடி க்ரீன் உள்ளிட்ட வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. 

இதன்மூலம் நியூசிலாந்து அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் லாரன் பெல், சார்லீ டீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் டாமி பியூமண்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதபின் களமிறங்கிய கேப்டன் ஹீத் நைட் 12 ரன்களுக்கும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 12 ரன்களுக்கும், அலிஸ் கேப்ஸி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து மையா பௌச்சர் 31 ரன்களுக்கும், டேனியல் வையட் 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த எமி ஜோன்ஸ் - சார்லோட் டீன் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எமி ஜோன்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எமி ஜோன்ஸ் 92 ரன்களையும், சார்லோட் டீன் 42 ரன்களையும் சேர்க்க இங்கிலாந்து மகளிர் அணி 41.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News