இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் சோஃபியா டங்க்லி 2 ரன்களுக்கும், டாமி பியூமண்ட் 19 ரன்களிலும், மையா பௌச்சர் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய எமி ஜோன்ஸ் 9 ரன்களுக்கும், கிப்ஸன் 14 ரன்களுக்கும், பெஸ் ஹெத், சார்லில் டீன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹீதர் நைட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 56 ரன்களையும், சாரா கிளென் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் சோஃபி டிவைன், ரோஸ்மெரி மைர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பெர்னாடின் பெசுய்டன்ஹவுட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான சூஸி பேட்ஸ் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அமெலியா கெர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

அனால் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் சோஃபி டிவைன் 17 ரன்களுக்கும், மேடி க்ரீன் 16  ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமெலியா கெரும் 44 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ப்ரூக் ஹாலிடே, இஸபெல்லா, ஜெஸ் கெர் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, இறுதிவரை போராடிய லியா 15 ரன்களையும், ரோஸ்மெரி 9 ரன்களை சேர்த்த நிலையிலும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் லௌரன் பெல், சார்லோட் டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News