இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் விளையாடவுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில், ஒரு மோசமான ஆட்டம் ஒருபோதும் உங்களை நல்ல அல்லது கெட்ட அணியாக மாற்றாது என்று இந்திய வீராங்கனை டைடாஸ் சாது தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இது ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் எனது டி20 அறிமுகத்திலிருந்து ஒரு நாள் அறிமுகம் வரை எனக்கு நீண்ட காத்திருப்பு இருந்தது, ஆனால் அது ஒரு அற்புதமான உணர்வு.

ஆனால் எனது அறிமுக போட்டியில் நாங்கள் விரும்பியபடி ஏதும் நடக்கவில்லை, ஆனால் நாங்கள் வலுவாக மீண்டு வருவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நாங்கள் பேசிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு போட்டி உங்களை ஒரு நல்ல அணியாகவோ அல்லது மோசமான அணியாகவோ மாற்றாது. எனவே, நாங்கள் இதுவரை பின்பற்றிய செயல்முறைகளை தொடர்ந்து செய்து, அடுத்த போட்டியில் எங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்ப்டுத்த முயற்சிப்போம்.

என்னைப் பொறுத்தவரையில் முந்தைய போட்டியில் அடைந்த தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே முக்கியம் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒரு போட்டியில் விளையாடினோம், அது எங்கள் வழியில் செல்லவில்லை. பரவாயில்லை, அதில் செய்த தவறுகளைத் திருத்தி அடுத்த போட்டியில் என்ன செய்ய முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டு நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். அதனை தொடர்ந்து சொய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News