ரிஷப் பந்தின் தாக்கத்தை இந்தியா இப்போது தான் உணர்கிறது - இயான் சேப்பல்!

Updated: Sun, Mar 05 2023 16:33 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது. 

இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது . இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டி சொதப்பலாகவே அமைந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியுள்ளனர்.  மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா ஓரளவு சிறப்பாக விளையாடினார். 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு பதிலாக அணியில் தேர்வு செய்யப்பட்ட கேஎஸ்.பரத் ஆறு இன்னிங்ஸ்கலில் விளையாடி 57 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது தொடக்கம் தான் என்றாலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிகளில் ஏற்படுத்திய தாக்கத்தை இந்திய அணி தற்போது இழந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் செப்பல் ரிஷப் பந்த் அணியில் இல்லாததுதான் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என குறிப்பிட்டு இருக்கிறார். 

இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் இந்தியா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தின் முக்கியத்துவத்தை இந்தியா இப்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. ரிஷப் பந்த் அணியில் இல்லாதது இந்தியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

வாகன விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பந்த் தற்போது அதிலிருந்து குணமடைந்து வருகிறார். இதன் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருடம் வரை ஒதுங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய அணியின் நம்பிக்கை பெற்ற ஒரு பேட்ஸ்மனாக விளங்கினார் ரிஷப் பண்ட். 2020-21 பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி அந்தத் தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். 

அந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரரும் இவர் தான். அந்தப் போட்டித் தொடர்களில் இவர் சதம் எடுக்கவில்லை என்றாலும் சிட்னி டெஸ்ட் போட்டியின் போது இவர் எடுத்த 97 ரன்கள் அந்தப் போட்டியை டிரா செய்ய உதவியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இவர் எடுத்த 88 ரன்கள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்தது.

பந்த் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாத சூழ்நிலையில் இந்திய அணியின் நிர்வாகம் கே எஸ் பரத்திற்கு அந்த வாய்ப்பை வழங்கியது. விக்கெட் கீப்பிங் கில் சிறப்பாக செயல்பட்டு வரும் பரத் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது இந்தியா அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. ஒன்பதாம் தேதி நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முயற்சி செய்யும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை