WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!

Updated: Wed, Jun 04 2025 14:43 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியானது அடுத்த வாரம் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மிட்செல் மார்ஷ் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார். 

மேலும் இந்த அணியின் கேப்டனாகவும் மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து பிபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி பேட்டர் மிட்செல் ஓவன் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் மேத்யூ குன்னமேன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காயத்திலிருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கூப்பர் கனொலிஆகியோருக்கும் ஆஸ்திரேலிய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேசமயம் பாகிஸ்தான் டி20 தொடரின் போது ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், சேவியர் பார்ட்லெட் உள்ளிட்டோர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கோனோலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா.

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை