INDW vs SAW: மூன்று வடிவிலான இந்திய அணியிலும் ஷப்னம் ஷகீல் சேர்ப்பு!

Updated: Thu, Jun 20 2024 23:11 IST
INDW vs SAW: மூன்று வடிவிலான இந்திய அணியிலும் ஷப்னம் ஷகீல் சேர்ப்பு! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும்  டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய மகளிர் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் ஜூன் 23ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள காரணத்தால் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியிலும், மறுபக்கம் இந்திய மகளிர் அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான தொடருக்கான மூன்று வடிவிலான இந்திய அணியிலும் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷப்னம் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த மகளீர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷப்னம் ஷகீலுக்கு இந்த வாய்ப்பானது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய மகளிர் ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா செத்ரி, தயாளன் ஹேமலதா, ராதா யாதவ், ஆஷா சோபனா, ஸ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக், பூஜா வஸ்திரேகர், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, பிரியா புனியா, ஷப்னம் ஷகீல்.

இந்திய மகளிர் டெஸ்ட் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா செத்ரி, தீப்தி சர்மா, ஸ்நே ராணா, சைகா இஷாக், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூஜா வஸ்திரேர் , அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், மேக்னா சிங், பிரியா புனியா, ஷப்னம் ஷகீல்

இந்திய  டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, உமா செத்ரி, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் , சாஜனா சஜீவன், தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், ஆஷா சோபனா, பூஜா வஸ்திரேகர் , ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ஷப்னம் ஷகீல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை