AFG vs PAK, 3rd T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!

Updated: Tue, Mar 28 2023 11:55 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டி20 தொடரை கைப்பற்றியது.

கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தப் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வழங்கினர். அந்த அணியின் இளம் துவக்க வீரர் சைம் அயூப் மிகச் சிறப்பாக ஆடி 40 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். மேலும் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இஃதிகார் அஹமத் 25 பந்துகளில் 31 ரன்களையும் அப்துல்லா ஷஃபீக் 13 பந்துகளில் 23 ரன்களையும் கேப்டன் சதாப் கான் 17 பந்துகளில் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 28 ரன்களை சேர்த்தார்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் 182 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முஜிப் உர் ரஹ்மான் இரண்டு விக்கெட்களையும், ரஷித் கான் முகமது நபி கரீம் ஜன்னத் பரீத் அஹமத் மற்றும் ஃபரூக்கி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் .

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் திணறியது. துவக்கம் முதலே மிகச் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் கலை அடுத்தடுத்து ஆட்டம் இழக்க செய்தனர். 

இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இந்தத் தொடரை இழந்தாலும் ஒரு ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடித்துக் கொண்டது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் கேப்டன் சதாப்கான் மூன்று விக்கெட்டுகளையும் இக்சனுல்லா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இமாத் வாசிம் முகம்மது வாசிம் ஜூனியர் மற்றும் ஜமான் கான் ஆகியோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இந்தப் போட்டியில் 28 ரன்களையும் எடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சதாப் கான் பாட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் தனது ஆல் ரவுண்ட் திறமையின் மூலம் சிறப்பாக செயல்பட்ட முகமது நபி தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை