Pakistan vs Bangladesh 1st Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

PAK vs BAN 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - காலை 11 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

PAK vs BAN 1st Test Pitch Report

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் 6 முறை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. அதேசமயம் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 338 ரன்களாக உள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 401 ரன்களாக அதிகரிக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 657 ரன்கள் எடுத்தது தான் அதிகபட்ச ஸ்கோராக இன்றுவரை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

PAK vs BAN 1st Test: Where to Watch?

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் ஒளிப்பரப்பு செய்யவில்லை. மேற்கொண்டு, எந்தவொரு ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

PAK vs BAN Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 13
  • பாகிஸ்தான் - 12
  • வங்கதேசம் - 0
  • முடிவில்லை - 01

Pakistan vs Bangladesh 1st Test Probable Playing XI

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: அப்துல்லா ஷஃபிக், சைம் அயூப், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அலி, குர்ரம் ஷஸாத்.

Advertisement

வங்கதேசம் உத்தேச லெவன் : மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஷஹாதத் ஹொசைன், மெஹ்தி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், காலித் அகமது.

PAK vs BAN 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் ஆசாம் (கேப்டன்), ஷான் மசூத், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, அப்துல்லா ஷஃபிக்
  • ஆல்ரவுண்டர் - ஷாகிப் அல் ஹசன் (துணை கேப்டன்), ஆகா சல்மான், மெஹ்தி ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - ஹசன் மஹ்மூத், ஷஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா.

PAK vs BAN 1st Test Dream11 Prediction,PAK vs BAN Dream11 Prediction, Today Match PAK vs BAN, PAK vs BAN Test Series, PAK vs BAN Dream11 Team, Fantasy  Cricket Tips, PAK vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Bangladesh Tour of Pakistan, Injury Update of the match between Pakistan vs Bangladesh

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News