Pakistan vs Bangladesh Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Advertisement

இதனால் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் அடுத்தடுத்து தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் எந்த அணி ஆறுதல் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PAK vs BAN ICC Champion Trophy 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  பாகிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் -  ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - பிப்ரவரி 27, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

PAK vs BAN Match Pitch Report

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ரவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 27 ஒருநாள் போட்டிகளில் 11 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 242 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 337 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

PAK vs BAN: Where to Watch?

Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PAK vs BAN ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 39
  • பாகிஸ்தான் - 34
  • வங்கதேசம் - 05

PAK vs BAN ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), ஜகர் அலி
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் ஆசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், நஸ்முல் ஹுசைன் சாண்டோ
  • ஆல்ரவுண்டர் - ஆகா சல்மான், குஷ்தில் ஷா, மெஹ்தி ஹசன், ரிஷாத் ஹுசைன்
  • பந்துவீச்சாளர்கள் - ஷஹீன் அஃப்ரிடி, அப்ரார் அகமது.
Advertisement

Pakistan vs Bangladesh Probable Playing XI

Pakistan Probable Playing XI: இமாம்-உல்-ஹக், பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), ஆகா சல்மான், தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.

Bangladesh Probable Playing XI: தன்ஸித் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஜ், தாவ்ஹித் ஹிர்டோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், ஜக்கர் அலி, ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

Advertisement

PAK vs BAN ODI Dream11 Prediction, PAK vs BAN Dream11 Prediction, Today Match PAK vs BAN, ICC Champion Trophy 2025, PAK vs BAN Dream11 Team, PAK vs BAN Pitch Report, Today Match Prediction, Fantasy Cricket Tips, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Pakistan vs Bangladesh 

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News