Pakistan vs Canada, Match 22 Dream11 PredictionICC T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PAK vs CAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs கனடா
  • இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

PAK vs CAN Pitch Report

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் குறித்த விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன. ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நிலையற்ற பவுன்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இது பேட்டர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிட்சாக இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் நீளமானது என்பதால் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். 

PAK vs CAN T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 01
  • பாகிஸ்தான் - 01
  • கனடா - 00
  • முடிவில்லை - 00

PAK vs CAN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Pakistan vs Canada Probable Playing XI

பாகிஸ்தான் உத்தேச லெவன்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகர் ஸமான், ஷதாப் கான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், நசீம் ஷா, முகமது அமீர்.

Advertisement

கனடா உத்தேச லெவன்: ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்கத் சிங், தில்ப்ரீத் பஜ்வா, நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மோவா, தில்லன் ஹெலிகர், சாத் பின் ஜாபர் (கேப்டன்), கலீம் சனா, ஜுனைத் சித்திக், ஜெர்மி கார்டன்.

PAK vs CAN T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம், நிக்கோலஸ் கிர்டன்
  • ஆல்ரவுண்டர்கள் - இமாத் வாசிம், தில்லன் ஹெய்லிகர், சாத் பின் ஜாபர்
  • பந்துவீச்சாளர்கள் - ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் (கேப்டன்), நசீம் ஷா (துணை கேப்டன்), முகமது அமீர், ஜெர்மி கார்டன்.

PAK vs CAN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match PAK vs CAN, PAK vs CAN Dream11 Team, Fantasy Cricket Tips, PAK vs CAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Pakistan vs Canada

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News