பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.  இதனால் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோ ரூட்டுடன் இணைந்த பென் டக்கெட் வழக்கம் போல் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

இதில் நிதான அட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோ ரூட் தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், அதிரடியாக விளையாடிய டக்கெட்டும் தனது அரைசத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரிகளுடன் 84 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்த ஹாரி புரூக்கும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இங்கிலாந்து அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது. 

இப்போட்டியில் அபாரமாக விளையடி வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 35ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக்கும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் அத்துடன் நிற்காமல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததுடன் 5அவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அசத்தினர். இதில் ஜோ ரூட் தனது 150 ரன்களையும் கடந்து தனது இரட்டை சதத்தை நோக்கி பயணித்து வருகிறார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 492 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள ஜோ ரூட் 176 ரன்களையும், அதிரடியாக விளையாடி வரும் ஹாரி புரூக் 141 ரன்களையும் சேர்த்துள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா மற்றும் அமீர் ஜமால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 64 ரன்கள் மட்டுமே பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணியானது நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News