பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

Advertisement

அதேசமயம் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சைம் அயூப் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து அப்துல்லா ஷஃபிக்குடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்து முயற்சியில் இறங்கினார். இவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசினர். 

இதன்மூலம் அப்துல்லா ஷஃபிக் மற்றும் ஷான் மசூத் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 122 ரன்களைச் சேர்த்து வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளார். இதில் ஷான் மசூத் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல், சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீர் ஜமால், ஷஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜேக் லீச், ஷோயப் பஷீர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News