PAK vs NZ, 1st ODI: ரிஸ்வான், பாபர், ஃபகர் அரைசதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

Updated: Mon, Jan 09 2023 22:52 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்ததால் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர டெவான் கான்வே ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் 29 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கேன் வில்லியம்சன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், டாம் லேதம், பிரேஸ்வெல் ஆகிய வீரர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் அவர்கள் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டனர்.

டேரில் மிட்செல் 36 ரன்களும், டாம் லேதம் 42 ரன்களும், கிளென் ஃபிலிப்ஸ் 37 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 43 ரன்களும் அடிக்க, 50 ஓவரில் 255 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி, 256 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை களமிறங்கியது. இதில் இமாம் உல் ஹக் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - கேப்டன் பாபர் ஆசாம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. பின் 56 ரன்களில் ஃபகர் ஸமான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப 66 ரன்களோடு பாபர் ஆசாமும் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, ஹாரிஸ் சொஹைலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரிஸ்வான் அரைசதத்தைப் பூர்த்தி செய்ய், மறுமுனையில் 32 ரன்களில் ஹாரிஸ் சொஹைல் தனது விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த முகமது ரிஸ்வான் 77 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை