பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - கேப்டன் பாபர் ஆசாம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர்.
பின்னர் இவரும் சதத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கையில் இமாம் உல் ஹக் 72 ரன்களிலும், பாபர் ஆசாம் 77 ரன்களிலும் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய முகமது ரிஸ்வான் 22, முகமது ஹாரிஸ் 6, முகமது நவாஸ் 3, ஷதாப் கான் 22, குஷ்டில் ஷா 22 என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களுக்கும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.