Pakistan Women vs New Zealand Women, Match 19 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடிய 3 போட்டிகளில்  இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பதிவுசெய்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணி விளையாடிய 3  போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியைச் சந்திது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது. இதனால் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும அதிகரித்துள்ளன. 

Advertisement

PAK-W vs NZ-W Match 19: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.14 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

PAK-W vs NZ-W Match 19: Ground Pitch Report

பாகிஸ்தான் - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 105 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 48 முறையும், சேஸிங் செய்த அணி 56 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

PAK-W vs NZ-W Match 19: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 11
  • பாகிஸ்தான் மகளிர் அணி - 02
  • நியூசிலாந்து மகளிர் அணி - 09
  • முடிவில்லை - 01
Advertisement

PAK-W vs NZ-W Match 19:: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan Women vs New Zealand Women Possible XIs

Advertisement

பாகிஸ்தான் மகளிர் அணி: முனீபா அலி, சித்ரா அமீன், நிதா தார், பாத்திமா சனா (கே), அலியா ரியாஸ், இராம் ஜாவேத், ஒமைமா சோஹைல், துபா ஹாசன், நஷ்ரா சந்து, சாடியா இக்பால், சையதா அரூப் ஷா.

நியூசிலாந்து மகளிர் அணி: சுஸி பேட்ஸ், ஜார்ஜியா ப்ளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா காஸ், லீ காஸ்பெரெக், லியா தஹுஹு, ரோஸ்மேரி மெய்ர், ஈடன் கார்சன்.

PAK-W vs NZ-W Match 19: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: முனீபா அலி (துணைக்கேப்டன்)
  • பேட்டர்ஸ்: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், சித்ரா அமீன் ஒமைமா ஷொஹைல்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோபி டிவைன், அமெலியா கெர் (கேப்டன்), நிதா தார்
  • பந்து வீச்சாளர்கள்: ரோஸ்மெரி மெய்ர், சாதியா இக்பால், லியா தஹுஹு
Advertisement

PAK W vs NZ W T20I Dream11 Prediction, PAK W vs NZ W Dream11 Team, Fantasy  Cricket Tips, PAK W vs NZ W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Pakistan Women vs New Zealand Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News