PAK-W vs SL-W Match 2 ICC Women's T20 World Cup 2024Dream11 Prediction:  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

Advertisement

அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Advertisement

PAK-W vs SL-W: Match Details

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் மகளிர் vs  இலங்கை மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.03 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

PAK-W vs SL-W: Ground Pitch Report

நடப்பு டி20 உலகக்கோக்கை தொடரின் முதல் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 48 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 28 முறையும், சேஸிங் செய்த அணி 20 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்கலாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

PAK-W vs SL-W: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 19
  • பாகிஸ்தான் மகளிர் அணி - 10
  • இலங்கை மகளிர் அணி - 00
  • முடிவில்லை - 01

PAK-W vs SL-W: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan Women vs Sri Lanka Women Possible XIs

பாகிஸ்தான் மகளிர் அணி: முனீபா அலி, குல் ஃபெரோசா, சித்ரா அமின், நிதா தார், ஃபாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், சதாப் ஷமாஸ், துபா ஹாசன், சாதியா இக்பால், நஷ்ரா சந்து, டயானா பைக்

Advertisement

இலங்கை மகளிர் அணி: ஹர்ஷிதா சமரவிக்ரம, சமாரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, உதேஷிகா பிரபோதனி, சச்சினி நிசன்சலா, சுகந்திகா குமாரி, இனோஷி பிரியதர்ஷனி, அச்சினி குலசூரிய

PAK-W vs SL-W: Dream11 team

விக்கெட் கீப்பர்கள் - முனீபா அலி
பேட்ஸ்மேன்கள் - ஹர்ஷிதா சமரவிக்ரம, குல் ஃபெரோசா
ஆல்-ரவுண்டர்கள் - சமாரி அத்தப்பத்து(கேப்டன்), ஃபாத்திமா சனா (துணைக்கேப்டன்), நிதா தார், கவிஷா தில்ஹாரி
பந்துவீச்சாளர்கள் - உதேஷிகா பிரபோதனி, சாடியா இக்பால், நஷ்ரா சந்து, அச்சினி குலசூரிய

PAK-W vs SL-W Match 2 Dream11 Prediction, Today Match PAK-W vs SL-W, PAK-W vs SL-W Dream11 Team, Fantasy Cricket Tips, PAK-W vs SL-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ICC Women's T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News