ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக 191 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக வென்று தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.

Advertisement

இந்த நிலையில் இந்தியா தங்களுடைய வெற்றி பயணத்தில் அடுத்ததாக நாளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறும் 4ஆவது போட்டியில் வங்கதேசத்தை மதியம் 2 மணிக்கு சந்திக்கிறது. சாதாரணமாகவே 2016 டி20 உலகக்கோப்பை, 2018 நிதிஹாஸ் கோப்பை போன்ற தொடர்களில் தோல்வியின் பிடியில் சிக்கியும் மீண்டெழுந்து வென்ற இந்தியா இம்முறையும் வங்கதேசத்தை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

அதே சமயம் இந்த உலகக் கோப்பையில் கத்துக் குட்டிகளாக கருதப்படும் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் கடந்த சில நாட்களில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தன. எனவே 2007 உலகக்கோப்பை போன்ற சம்பவத்தை மீண்டும் வங்கதேசத்தை செய்யவிடாமல் இந்தியா இம்முறை கவனத்துடன் மதிப்பு கொடுத்து விளையாடி வெற்றிக்கான முனைப்புடன் களமிறங்க உள்ளது. 

இந்த சூழ்நிலையில் இந்தியாவை இப்போட்டியில் வங்கதேசம் தோற்கடித்தால் வங்கதேசத்திற்கு சென்று அங்குள்ள பெங்காலிபையனுடன் டேட்டிங் செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் சின்வாரி தனது சமூக வலைதளப்பதிவில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தங்களுக்கு தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு வங்கதேசம் அவமான தோல்வியை பரிசளித்தால் டேட்டிங் செய்ய தயார் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.  

 

அவரது பதிவில், “அடுத்த போட்டியில் வங்கதேச வீரர்கள் எங்களுக்காக அவர்களை பழி வாங்குவார். அவர்களின் அணி இந்தியாவை வெல்ல முடிந்தால் நான் தாக்காவுக்கு சென்று ஒரு பெங்காலி பையனுடன் மீன் விருந்து சாப்பிட்டு டேட்டிங் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரது பதிவு செமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News