வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் இப்போட்டியும் ராவல்பிண்டிக்கு மாற்றப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளந்து. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த அமீர் ஜமால் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அவர் இதுவரை முழு உடற்தகுதியை எட்டாத காரணத்தால் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அப்ரார் அஹ்மத் மற்றும் காம்ரன் குலாம் ஆகியோரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சௌத் ஷகீல், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி.