சாம்பியன்ஸ் கோப்பை 2025: பொதுவான இடமாக யுஏஇ-யை தேர்வு செய்தது பிசிபி!

Updated: Mon, Dec 23 2024 09:53 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியை பகிஸ்தான் செல்ல அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலில் ஹைபிரிட் மாடலில் இத்தொடரை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புகொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், எதிர்வரும் 2031ஆம் ஆண்டு வரை இந்தியாவில் விளையாடும் ஐசிசி தொடர்களையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயாய ஐசிசி தொடர் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 2027ஆம் ஆண்டுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் நடைமுறை படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் பொதுவான இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நடுநிலையான இடமாக துபாயை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது, அது அதிகாரப்பூர்வமாக ஐசிசிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா அணி தனது போட்டிகளை துபாயில் விளையாடும்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அடுத்த வாரம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை