இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். 

Advertisement

இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி அளவில் நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை அந்த காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

அவருக்கு நெற்றி, முழங்கால், முதுகு, மணிக்கட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைந்து குணம் பெற வேண்டி சக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் தனது வேதனையை பகிர்ந்திருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் எல்லைகளால் வேறு வேறாக பிரிந்திருந்தாலும் மனிதத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது ஷாஹீன் அஃப்ரிடியின் ட்வீட். அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘பிரார்த்திக்கிறேன் ரிஷப் பந்த’ என அவர் ட்வீட் செய்துள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News