இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிசெய்து அசத்தியது. 

Advertisement

இதன்மூலாம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வென்றதுடன், இந்திய அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் நியூசிலாந்து அணியும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றுவதும் இதே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், இந்திய அணி சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பாகிஸ்தான் அணியாலும் இந்தியா அணியை வீழ்த்த முடியும் என கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்கு இது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும் என நினைக்கிறேன். கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றால் அது நன்றாக இருக்கு.

இப்போதுள்ள சூழலில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களீல் இந்தியாவை டெஸ்டில் வீழ்த்த பாகிஸ்தானுக்கு இப்போது வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் சொந்த மைதானத்தில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. 

அதேசமயம் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. இதற்கு முன் இவ்விரு அணிகளும் 59 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவுள்ள நிலையில், அதில் 9 முறை இந்திய அணியும், 12 முறை பாகிஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதேசமயம் 38 போட்டிகள் முடிவின்றி டிராவில் முடிந்துள்ளது. அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணியானது 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அதன்பின்னர் இவ்விரு அணிகளும் இதுநாள் வரை டெஸ்ட் போட்டிகளில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News