PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!

Updated: Tue, Apr 04 2023 20:58 IST
Pakistan have been boosted by a big return for the white-ball series against New Zealand! (Image Source: Google)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர்கள் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பகர் ஸமான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்புகின்றனர். அதேபோல் நீண்ட நாளுக்கு பிறகு நட்சத்திர வீரர் ஷாஹின் அஃப்ரிடியும் அணியில் இடம்பிடிதுள்ளார். 

டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு பாபர் ஆசாம் கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரிசர்வ் வீரர்களாக அபாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, தயூப் தாஹிர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் டி20 அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), பஹீம் அஷ்ரப், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரால்ப், இப்டிகார் அகமது, இஹ்ஸானுல்லாஹ், இமாத் வாசிம், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், ஜமான் கான்.

பாகிஸ்தான் ஒருநாள் அணி: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), அப்துல்லா ஷபீக், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரால்ப், ஹாரிஸ் சோஹைல், இஹ்ஸானுல்லாஹ், இமாம் உல் ஹக், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசின் ஜூனியர், நசீம் ஷா, சல்மான் அலி ஆஹா, ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், உசாமா மிர்.

ரிசர்வ் வீரர்கள்: அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, தயப் தாஹிர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை