AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!

Updated: Mon, Dec 25 2023 11:37 IST
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு! (Image Source: Google)

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்குகிறது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் நௌன் அலி விலகியுள்ளார். ஏற்கெனவே பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் காயம் காரணமாக விலகிய நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நௌமன் அலியும் இணைந்துள்ளார்.

இது தொடர்பான தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகருக்குச் சென்றுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை