வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - பர்வேஸ் ஹொசைன் எமோன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். 

Advertisement

இதில் தன்ஸித் ஹசன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களைச் சேர்த்திருந்த பர்வேஸ் ஹொசைன் எமொனும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் தாவ்ஹித் ஹிரிடோ 25 ரன்களையும், லிட்டன் தாஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சாஹிப்சதா ஃபர்ஹான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த சைம் அயூப் மற்றும் முகமது ஹாரிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சைம் அயூப் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹசன் நவாஸும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களில் நடையைக் கட்டினார். 

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் இப்போட்டியில் அபாரமாக விளையாடிய முகமது ஹாரிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 107 ரன்களையும், கேப்டன் சல்மான் ஆகா 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வங்கதேச அணியின் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News