ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் இருந்து பாக். முக்கிய வீரர்கள் விலகல்!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வீரர்கள் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விசயமாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அஹ்மத் டேனியல், ஷநவாஸ் தஹானி ஆகியோர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர்கள் இருவரும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு பதிலாக அப்பாஸ் அப்ரிடி மற்றும் ஜஹந்தத் கான் ஆகியோர் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு சற்று ஆறுதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கே), சைம் அயூப், அப்துல்லா ஷபீக், கம்ரான் குலாம், ஆகா சல்மான், தயப் தாஹிர், இர்பான் கான், அமீர் ஜமால், ஹரிஸ் ரவூப், பைசல் அக்ரம், அப்ரார் அகமது, முகமது ஹஸ்னைன், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், ஹசீபுல்லா கான்