இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.

Advertisement

இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 

Advertisement

அக்கூட்டத்தின் முடிவில் இந்திய அணி வீரர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கிவுள்ளது. அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியில் இணைந்து விளையாடுவதை உறுதிசெய்துள்ளார். மேற்கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் உள்ளிட்டோரும் ரஞ்சி தொடரில் பங்கேற்க இருக்கின்றனர். 

இந்நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெல்லி அணியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விராட் கோலிக்கு கழுத்து பகுதியில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக இப்போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் ரிஷப் பந்த் எதிர்வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடுவதை அம்மாநில கிரிக்கெட் சங்கம் உறுதிசெய்துள்ளது. 

அதன்படி டெல்லி கிரிக்கெட் சங்கம் அடுத்த போட்டிக்கான 21 பேர் அடங்கிய டெல்லி அணியை நேற்றைய தினம் அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஆயூஷ் பதோனி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் இந்த அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், விராட் கோலியின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

டெல்லி ரஞ்சி அணி: ஆயுஷ் பதோனி (கே), சனத் சங்வான், அர்பித் ராணா, யாஷ் துல், ரிஷப் பந்த், ஜான்டி சித்து, ஹிம்மத் சிங், நவ்தீப் சைனி, மனி கிரேவால், ஹர்ஷ் தியாகி, சித்தாந்த் சர்மா, ஷிவம் சர்மா, பிரணவ் ராஜ்வன்ஷி, வைபவ் கண்ட்பால், மயங்க் குசைன், ககன் வாட்ஸ், ஆயுஷ் தொசேஜா, ரவுனக் வகேலா, சுமித் மாத்தூர், ராகுல் கஹ்லோட், ஜிதேஷ் சிங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News