ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Advertisement

இப்போட்டிக்கான இரு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்திருக்கும் நிலையில், இதில் பிளேயிங் லெவனில் எந்தெந்தெ வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனைப் பொறுத்தமட்டில் யார் தொடக்க வீரராக களமிறங்குவார்? மிடில் ஆர்டரில் யார் இடம்பெறுவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் எந்த வரிசையில் விளையாடுவார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

ஏனெனில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்த பிறகு ஸ்டீவ் ஸ்மித் சில போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கினார். இருப்பினும் அதில் அவரால் சோபிக்க முடியவில்லை. அதன்பின் அவர் மீண்டும் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்கினார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மூன்றாம் வரிசையில் யார் விளையாடுவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாம் வரிசையில் களமிறங்குவாரா அல்லது கேமரூன் க்ரீனுக்கு வய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அவரது வழக்கமான 4ஆம் வரிசையில் தான் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஸ்டீவ் ஸ்மித் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்வார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். மற்ற வீரர்களின் இடம் குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்தில் இருப்பார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். கடந்த 2023ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு அதைத் தக்கவைத்துக்கொள்வது பற்றியும், அதனை பாதுகாப்பது பற்றியும் நிறைய பேச்சுக்கள் உள்ளன. 

Advertisement

ஏனெனில் நீங்கள் இறுதிப் போட்டிக்கு வரும் வரை உங்களால் கோப்பையைத் தக்கவைப்பது உறுதியானது அல்ல. ஆனால் இப்போது நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டோம், ஆதனால் மற்றொரு ஐசிசி கோப்பையை வெல்வது மிகவும் அருமையாக இருக்கும். ஆமாம், இரண்டு (WTC பட்டங்கள்) நம்பமுடியாததாக இருக்கும். கடந்த சில வருடங்களாக நாங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறிவுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News