இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்!

Updated: Mon, Apr 29 2024 13:51 IST
இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஷிவம் தூபேவின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 52 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “இப்போட்டியில் நாங்கள் டாஸ் வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்வதே வெற்றிக்கு வழிவகுக்கும் என நினைத்தோம். அவர்கள் முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 210 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் எங்களிடம் உள்ள பேட்டிங் லைன் அப்பைவைத்து நாங்கள் அதனை எளிதாக வெற்றிபெறுவோம் என நினைத்தோம். மேலும் மைதானமும் பேட்டிக்கிற்கு சாதகமாக இருந்தது.

அதன் காரணமாக எங்கள் பேட்டர்களும் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஏனெனில் எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே தனித்தனியாக ஒவ்வொரு போட்டியில் வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளனர். இந்த போட்டியில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்தது. முதல் இன்னிங்சின் போதும் பனிப்பொழிவு இருந்தது. இந்த தோல்வியில் இருந்து நிச்சயம் எங்களால் பலமாக மீண்டு வரமுடியும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை