அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு டாப் ஆர்டர் வீரர்கள் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ரிஷாத் ஹொசைன் அகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்ட்ன நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாண்டோ 41 ரன்களிலும், ஹிரிடோய் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறிய காரணத்தால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை வீசிய பாட் கம்மின்ஸ் அந்த ஓவரின் 5ஆவது பந்தில் மஹ்முதுல்லாவையும், 6ஆவது பந்தில் மெஹதி ஹசனின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதன்பின் 20ஆவது ஓவரின் முதல் பந்திலேயே தாவ்ஹித் ஹிரிடோயின் விக்கெட்டை வீழ்த்தி தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். மேலும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய 7ஆவது வீரர் மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையையும் பாட் கம்மின்ஸ் படைத்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் ஆஸி ஜாம்பவான் பிரெட் லீ ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

Advertisement

 

அதன்பின் தற்போது தான் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News