வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று டப்ளினில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆண்ட்ரூ பால்பிர்னி 112 ரன்களையும், ஹாரி டெக்டர் 56 ரன்களையும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 53 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 303 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 55 ரன்களையும், மேத்யூ ஃபோர்ட் 38 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசட்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அயர்லாந்து அணி வீரர் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

அதன்படி இப்போட்டியில் பால் ஸ்டிர்லிங் 37 ரன்களை கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 10ஆயிரம் ரன்களையும் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார். இதுவரை பால் ஸ்டிர்லிங் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 326 போட்டிகளில் 324 இன்னிங்ஸ்களில் விளையாடி 1018 ரன்களை எடுத்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News