17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 33அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளன. அதன்படி மும்பை அணி சிஎஸ்கேவிடமும், பஞ்சாப் அணி ராஜஸ்தானிடமும் அதிர்ச்சி தோல்விகளைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன .

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானமானது கடந்த 2021ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.  இதில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடபெறவுள்ளன. இதனால் இந்த மைதானத்தின் ஆடுகளம் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இத்தொடரில் அங்கு நடைபெற்ற போட்டிகள் அனைத்து அதிக ஸ்கோர்களை குவித்த போட்டிகளாக அமைந்த, நிலையில் கடைசி போட்டியில் பெரிதளவில் ரன்கள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச சிறப்பாக இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • பஞ்சாப் கிங்ஸ் - 15
  • மும்பை இந்தியன்ஸ் - 16
  • முடிவில்லை - 01

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: அதர்வா டைடே, ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன் (கே), ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா

Advertisement

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), திலக் வர்மா, டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ்: சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, பிரப்சிம்ரன் சிங்
  • ஆல்ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்திக் பாண்டியா, சாம் குர்ரன் (கேப்டன்), ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

PBKS vs MI IPL 2024 Dream11 Prediction, Today Match PBKS vs MI, PBKS vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, PBKS vs MI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Punjab Kings vs Mumbai Indians

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News