இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் வலிமை மிக்க அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கடைசி போட்டியில் அந்த அணி இறுதிவரை போராடியும் தோல்வியைச் சந்தித்துள்ள அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

இருப்பினும் இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5  போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளதால் அந்த அணியின் வெற்றிப்பயணம் தொடரும் என ரசிகர்கள் எதிபார்க்கின்றனர். மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமாக பார்க்கப்பட்டாலும், கடைசி போட்டியில் அந்த அணியும் இறுதிவரை போராடி தோல்வியைத்  தழுவியுள்ளது. இதனல் இரு அணியும் இப்போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானமானது கடந்த 2021ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.  இதில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடபெறவுள்ளன. இதனால் இந்த மைதானத்தின் ஆடுகளம் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இத்தொடரில் அங்கு நடைபெற்ற போட்டிகள் அனைத்து அதிக ஸ்கோர்களை குவித்த போட்டிகளாக அமைந்துள்ளன. அதேசமயம் இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச சிறப்பாக இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 26
  • பஞ்சாப் கிங்ஸ் - 11
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 15

உத்தேச லெவன்

Advertisement

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் ஷர்மா, அஷுதோஷ் சர்மா, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ஷிகர் தவான், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள்: சாம் கரன் (துணை கேப்டன்), ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டோன்
  • பந்துவீச்சாளர்கள்: யூசி சாஹல், டிரென்ட் போல்ட், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
Advertisement

PBKS vs RR IPL 2024 Dream11 Prediction, Today Match PBKS vs RR, PBKS vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, PBKS vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Punjab Kings vs Rajasthan Royals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News