எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.  

Advertisement

இதனால் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்பது பெரும் விவாதங்களை எழுப்பி வருகிறது. ஏனெனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.

Advertisement

இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி இந்த ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த விரும்பும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஆனால் பிசிசிஐ இந்திய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் படி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி எண்ணிய படி இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

மேற்கொண்டு இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் தொடரின் அப்போட்டியானது துபாயில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தானில் விளையாட தயங்கும் பட்சத்தில், இந்திய அணி போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் டெல்லி அல்லது சண்டீகருக்கு உடனே சென்றுவிடலாம். அதற்கேற்றவாரு லாகூரில் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லாகூரில் விளையாடுவது இந்திய அணிக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஐசிசி ஐபிரிட் மாடலில் நடத்த திட்டமிட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த யோசனையை பிசிசிஐ ஏற்குமா என்பது மிகப்பெரும் கேள்வியாக தற்போது மாறியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News