வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி வீரர் தங்களது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையே கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளடு. மேற்கொண்டு ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களுடைய முதன்மை நோக்கம் என்றும், இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.
பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி