PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; கடின இலக்கை விரட்டும் இஸ்லாமாபாத் யுனைடெட்!

Updated: Thu, Mar 16 2023 21:16 IST
Peshawar Zalmi ended up scoring 183 runs with the loss of eight wickets against Islamabad United! (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயுப் - பாபர் ஆசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அயுப் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹசீபுல்லாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் அதிரடியாக விளையாடிய பாபர் ஆசாம் அரைசதம் கடந்தார். 

பின் அவருடன் இணைந்த முகமது ஹாரிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 64 ரன்களில் பாபர் ஆசாம் விக்கெட்டை இழக்க, 34 ரன்களை எடுத்திருந்த முகமது ஹாரிஸும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் டாம் கொஹ்லர் ஒருமுனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், அமெர் ஜமல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை