வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 

Advertisement

அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெஃபர்ட், குடகேஷ் மோட்டி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் ஓருரளவு தாக்குப்பிடித்து விளையாடியதன் காரனமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 38 ரன்னும், ரொமாரியோ ஷெஃபர்ட் 35 ரன்னும், குடகேஷ் மோட்டி 33 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 30 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாகிப் மஹ்மூத் 4 விக்கெட்டுகளையும், பில் சால்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் பிலிப் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் வில் ஜாக்ஸ் 17 ரன்னில் அவுட்டானார். ஜாஸ் பட்லர் டக் அவுட்டானார்.

பின்னர் பிலிப் சால்டுடன் இணைந்த ஜேக்கப் பெத்தெலும் அதிரடியாக விளையாட அணியின் வெற்றியும் எளிதானது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் தனது மூன்றாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜேக்கப் பெத்தெலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இங்கிலாந்து அணியானது 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 9 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 103 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிகொடுத்த பில் சால்ட் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பில் சால்ட் மூன்று சதங்களை விளாசியுள்ள நிலையில், அந்த மூன்று சதங்களும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து அசத்திய பில் சால்ட், தற்சமயம் மீண்டிம் அதே அணிக்கு எதிராக சதம் விளாசி இந்த சாதனையைப் படைத்துள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் எவின் லூயிஸ், கிளென் மேக்ஸ்வெல், முகமது வசீம் மற்றும் லெஸ்லி டன்பார் ஆகியோர் தலா 2 முறை ஒரு அணிக்கு எதிராக சதம் விளாசி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளனர். 

ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் (சர்வதேச டி20-இல்)

  • 3 - பில் சால்ட் v வெஸ்ட் இண்டீஸ்*
  • 2 - லூயிஸ் v இந்தியா
  • 2 - லெஸ்லி டன்பார் v பல்கேரியா
  • 2 - கிளென் மேக்ஸ்வெல் v இந்தியா
  • 2 - முஹம்மது வசீம் v அயர்லாந்து
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News