கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

இதில் சுனில் நரைன் 23 பந்துகளிலும், பிலிப் சால்ட் 25 பந்துகளிலும் என அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரைன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்த நிலையில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்களையும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த பில் சால்ட் 75 ரன்களைச் சேர்த்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் சாம் கரண் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனபடி இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை சாம் கரண் வீச, அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய சால்ட், அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News