பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பந்துவீசியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணியில் ஸ்டோய்னிஸ், கிளார்க், லார்கின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் சதம் விளாசி அசத்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 5 விக்கெட்களை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 103 ரன்களைக் குவித்தார். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய சிட்னி சிக்சர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜோஷ் பிலீப் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடத் துவங்கினார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், சிறிதும் கவலையில்லாமல் அதிரடியாக விளையாடி வந்த பிலீப் 99 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டாலும், அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

Advertisement

இதன்மூலம் 19.4 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News