இந்தூர் ஆடுகளம் மோசமானது - மார்க் டெய்லர்!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இடையேயான 3ஆவது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. முதல் பேட்டிங் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் சேர்ந்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இறுதியில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.
கடந்த 1ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் மொத்தம் 3 நாட்களில் முடிவடைந்தது. இந்த போட்டியில் சுழற்பந்துக்கு சாதகமாகவே இந்த மைதானம் இருந்தது. பெரும்பாலான விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். இந்தூர் கிரிக்கெட் மைதானம் மிகவும் மோசமான ஆடுகளம் என்று ஐஐசி மதிப்பீடு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தத் தொடரில் ஆடுகளங்கள் மோசமாக இருந்தன என்று நான் நினைக்கிறேன், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் , மேலும் இந்த 3 டெஸ்ட் போட்டியில் இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.