Paarl Royals vs Joburg Super Kings Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது..

Advertisement

இத்தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய4  போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டிளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

PR vs JSK, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
  • இடம் -  போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானம், பார்ல்
  • நேரம் - ஜனவரி 20, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)

PR vs JSK Pitch Report

இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 130 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 173 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PR vs JSK: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 04
  • பார்ல் ராயல்ஸ் - 03
  • ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 01
Advertisement

PR vs JSK: Where to Watch?

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PR vs JSK Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், டெவான் கான்வே, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜோ ரூட் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - டேவிட் வைஸ், தயான் கலீம், டோனோவன் ஃபெரீரா (துணை கேப்டன்)
  • பந்து வீச்சாளர்- முஜீப் உர் ரஹ்மான், இம்ரான் தாஹிர்
Advertisement

Paarl Royals vs Joburg Super Kings Probable Playing XI

Joburg Super Kings Probable Playing XI : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), டெவன் கான்வே, லியூஸ் டு ப்ளூய், ஜானி பேர்ஸ்டோவ், விஹான் லுபே, டோனோவன் ஃபெரீரா, டேவிட் வைஸ், இவான் ஜோன்ஸ், தப்ரைஸ் ஷம்சி, இம்ரான் தாஹிர், மத்தீஷா பதிரானா

Paarl Royals Probable Playing XI: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஜோ ரூட், மிட்செல் வான் பியூரன், டேவிட் மில்லர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், தயான் கலிம், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, பிஜோர்ன் ஃபோர்டுயின், துனித் வெல்லாலகே, முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா.

Advertisement

PR vs JSK Dream11 Prediction, PR vs JSK Dream11 Team, Today Match PR vs JSK, SA20 2025, Fantasy Cricket Tips, PR vs JSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Paarl Royals vs Joburg Super Kings

Disclaimer: *இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News